பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடியை அம்பலப்படுத்திய எம்.பி!

2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடியை அம்பலப்படுத்திய எம்.பி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெளிநாடு செல்வதாகக் கூறி, விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் இலங்கையிலேயே வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். 

2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பல்கலைக்கழக வாரியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் - 80, பேராதனையில் - 41, ஜயவர்தனபுர - 35, களனி - 54, திறந்த பல்கலைக்கழகத்தில் - 17, ருஹுணு பல்கலைக்கழகத்தில் - 81 என 80 பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஏழு வருட விடுமுறை எடுத்துள்ளதாக எம்.பி சுட்டிக்காட்டினார். 

ஏழு வருடங்களுக்கு விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90 சதவீதமானோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக அவர் குற்றஞ்சாட்டினார். 

2020-2023ஆம் ஆண்டு  காலப்பகுதியில் வெளிநாடு செல்வதாகக் கூறி விடுமுறை எடுத்தவர்களில் 7 பேரே வெளிநாடுகளில் உள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT