ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் - ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார  திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து  அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் - ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில்  ஜனாதிபதி அநுரகுமார  திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து  அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு  ஆகிய 3 அமைச்சுக்களுக்கும்  வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து  அமைச்சு என்பவற்றுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன்,  பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சரான கலாநிதி பிரசன்ன குமார குணசேன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT