வருடாந்த நிகழ்வில் சமூக சேவையாளர்களுக்கு விருது!

மருத்துவம், புத்தாக்கம் மற்றும் பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதி உச்ச கடமை  என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை  வெளிப்படுத்திய கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

வருடாந்த நிகழ்வில் சமூக சேவையாளர்களுக்கு விருது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்திய-சிலோன் நட்புறவு அமைப்பும், லங்கா சாதனையாளர் மன்றமும் இணைந்து நடத்திய வருடாந்த நிகழ்வு, பேராசிரியர் டொக்டர் பெர்னாண்டோ மற்றும் இயக்குனர் ரகு இந்திரகுமார் தலைமையில், கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் பல பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களும் கையளிக்கப்பட்டன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், மருத்துவம், புத்தாக்கம் மற்றும் பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதி உச்ச கடமை  என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை  வெளிப்படுத்திய கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

விழாவின் பிரதம அதிதியாக பேராசிரியர், கலாநிதி மது கிருஷ்ணன், அமெரிக்காவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் AUGP/UNUGP USA இன் தலைமை அதிகாரியும் தலைவர் நிறுவனரும் இந்திய சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் டொக்டர் எஸ். முத்துராமலிங்கம், இலங்கை அழகி வியானா பீட்டர்ஸ் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள், மலையக கலாசார ஒன்றியத்தின் அமைப்பாளர்கள், சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT