மூன்று பிள்ளைகளின் தாய் வீட்டுக்குள் கொலை

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாய் வீட்டுக்குள் கொலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மதுரங்குளிய, நல்லந்தல்வ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் வயோதிப தாயொருவர் கட்டி வைக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

71 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும், பிள்ளைகள் அவ்வப்போது வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண் தனது வீட்டின் படுக்கையில் கொல்லப்பட்டதாகவும், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT