கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவைப் பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் நேற்றிரவு (21) உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவைப் பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது, உறவினர் ஒருவர் உழவு இயந்திரத்தை இயக்கியுள்ளார். குழந்தைகள் இழுவைப் பகுதியில் இருப்பதை கவனிக்காத நிலையில், வீட்டின் முன்றலில் இயந்திரத்தைத் திருப்ப முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த 3 வயது குழந்தை, அதன் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் படுகாயமடைந்துள்ளது.

உடனடியாக குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை இயக்கிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -