அதிகாலையில் ஏற்பட்ட விபத்து சம்பவம் - அறுவர் படுகாயம்

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் ஏற்பட்ட விபத்து சம்பவம் - அறுவர் படுகாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

காரொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சுகதகம பகுதியில் இவ்விபத்து இன்று (15) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பொஷன் நிகழ்விற்காக அநுராதபுரம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றைய மூவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT