பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேடஅறிவிப்பு

இன்றுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நிறையவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான விசேடஅறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நிறையவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளவுள்ளதுடன், அது மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, முதலாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 22 திகதி வரை இடம்பெறும். இதனையடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும்.

பின்னர் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை மூன்றாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT