இன்று மதுபானம் வாங்க முடியாது! நாடு முழுவதும் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

மதுபானப் பழக்கத்தால் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாரிய தீமைகள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.

இன்று மதுபானம் வாங்க முடியாது! நாடு முழுவதும் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக மதுவிலக்கு தினத்தையொட்டி, இன்று சனிக்கிழமை (03) நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி, சர்வதேச மதுவிலக்கு தினமாக உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மதுபானப் பழக்கத்தால் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாரிய தீமைகள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.

அத்துடன், பொதுமக்களிடையே மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது மற்றும் மது அருந்துவதை முழுமையாகத் தவிர்ப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் மதுவரித் திணைக்களத்தால் இந்த விசேட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT