கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் கோளாறு; இன்றிரவு பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை
இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே, இந்த திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதன்காரணமாக இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் அமுல்படுத்தப்படும் என அந்த சபை மேலும் அறிவித்துள்ளது.
Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -