இவ்வருட இறுதிக்குள் 23,000 ஆசிரியர் நியமனங்கள் நிச்சயம் வழங்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

23,000 ஆசிரியர் நியமனங்களை 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் முழுமையாக வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வருட இறுதிக்குள் 23,000 ஆசிரியர் நியமனங்கள் நிச்சயம் வழங்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வருட இறுதிக்குள் 23,000 ஆசிரியர் நியமனங்கள் நிச்சயம் வழங்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

இவ்வருடத்திற்குள் அரசாங்கத்தினால் 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ முற்றாக நிராகரித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் அனைத்து நியமனங்களும் வழங்கி முடிக்கப்படும் என்றும் அவர் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சையின் விடைத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படாத நிலையில், இவ்வருடத்திற்குள் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பை அவர் மறுத்தார். 

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனச் சுட்டிக்காட்டிய அவர், 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது சாத்தியமற்றது என்ற குற்றச்சாட்டு தவறானது எனவும், திட்டமிட்டபடி இவ்வருடமே ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதை தொழிற்சங்கங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்து வெளியிட்ட செயலாளர், பரீட்சை நடைபெற்று பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவ்வாறானதொரு சூழல் நிலவுவதற்கு வாய்ப்பே இல்லை என்றார். 

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் காத்திருக்கும் அளவிற்கு அமைச்சு குறுகிய நோக்கில் செயற்படாது என்றும், இக்குற்றச்சாட்டை தாம் நூற்றுக்கு நூறு வீதம் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு செயல்முறைகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், பரீட்சையில் சித்தியடைந்தவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை நடாத்துவது தொடர்பான பயிற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே மிக விரைவில் நேர்முகத் தேர்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறை இவ்வருட இறுதிக்குள் 50,000 ஐத் தாண்டக்கூடும் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னதாக எச்சரித்திருந்தது. தற்போதுள்ள 40,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுடன், 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது தவணை சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொண்டு சுமார் 10,000 ஆசிரியர்கள் ஓய்வுபெறக்கூடும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாத நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பணிகள் பரீட்சைத் திணைக்களத்தின் பணிச்சுமையை அதிகரிக்கும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். 

மேலும், வழமையான நடைமுறைகளின் கீழ் 69,000 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டியுள்ளதால் இந்த ஆட்சேர்ப்பை 2027 மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவு செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT