பாடசாலை சீருடையில் ஆபாச காணொளி பதிவு:  இளம் தம்பதி கைது

28 வயதுடைய பெண் மற்றும் 29 வயதுடைய ஆண் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை சீருடையில் ஆபாச காணொளி பதிவு:  இளம் தம்பதி கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாடசாலை சீருடையுடன் ஆபாச காட்சிகளை பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளம் ஜோடியொன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

28 வயதுடைய பெண் மற்றும் 29 வயதுடைய ஆண் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட பெண் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆண் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதிவு திருமணம் செய்துள்ள குறித்த ஜோடி, அடுத்த வருடம் திருமண விழாவை நடத்த உள்ளதாகவும், இருவரும் பட்டதாரிகள் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறான காணொளிகளை தயாரித்து வெளியிட்டதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து காணொளி தயாரிப்புக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணினி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்படுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்த குறித்த ஜோடி தொடர்பில் கடுகன்னாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT