வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பணவீக்கம் குறைவதற்கு இணையாக அடுத்த இரண்டு மாதங்களில் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

இதன் போது வங்கி வட்டி விகிதங்களும் குறையும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(19) இடம்பெற்ற அரசாங்க செய்தியாளர் மாநாட்டில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் தெரிவித்தார். 

இறக்குமதி கட்டுப்பாடுகளால் சுங்க திணைக்களத்திடமிருந்து கிடைக்கும் பாரியளவு வரி வருமானம் குறைவடைந்துள்ளது. வாகனங்களுக்கான இறக்குமதித் தடை இவ்வாண்டு நீக்கப்பட மாட்டாது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது சுமார் 900 பொருட்களுக்கான இறக்குமதித் தடை தொடர்ந்தும் காணப்படுகிறது. இவற்றில் 300 பொருட்கள் வாகனங்களுடன் தொடர்புடையவையாகும். 

எவ்வாறிருப்பினும் தொடர்ந்தும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால் அது சர்வதேச சந்தையில் கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT