மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் பாதிப்படைந்துள்ளமையால் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், ஒரு கிலோகிராம் கரட் மொத்த விற்பனையின் கீழ் 260 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனை செய்வதுடன் கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், லீக்ஸ் 130 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 முதல் 70 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் அருண சாந்த ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT