உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் இன்று ஆரம்பமாகின்றது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் இன்று ஆரம்பமாகின்றது.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

புதியவர்கள் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு WhatsApp இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார். (News21)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT