இரண்டு தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் தேர்தல் நடத்தும் முறைப்படி அது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இருப்பதாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு மட்டுமே வழங்கப்படும்.

ஆனால் பொதுத் தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்துவது குறித்தும், அங்கு வாக்களிப்பது குறித்தும் இந்த நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு சரியான தெளிவு இல்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், சில அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் ஒரு தரப்பினரையும், ஜனாதிபதித் தேர்தலில் வேறொரு வேட்பாளரையும் ஆதரித்து போட்டியிடும் நிலைமை உள்ளதாக ஒரு குறிப்பிட்ட சிக்கல் நிலை உருவாகலாம்.

இவ்வாறான பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தற்போது ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துமாறு இதுவரை எந்தக் கட்சியும் தம்மிடம் கோரவில்லை தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT