மளமளவென உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மளமளவென உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்று விலை அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,705ஆகவும், சவரன், ரூ.45,640 ஆகவும் இருந்து வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, 5,755 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்து, 46 ஆயிரத்து 040 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது அந்த விலையை தாண்டி செல்வது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.77.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.77,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 6 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.   

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT