இன்றைய வானிலை - நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை
இன்றைய வானிலை - Sri Lanka Weather Report for Monday, October 3, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை - Sri Lanka Weather Report for Monday, October 3,
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
50-55 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.