மின்சார கட்டணம் உயர்வு:  ஏப்ரல் 1 முதல்  புதிய கட்டணங்கள் நடைமுறை

இலங்கையில் மின்சார கட்டணம் 2026 இரண்டாம் காலாண்டுக்காக உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் உயர்வு:  ஏப்ரல் 1 முதல்  புதிய கட்டணங்கள் நடைமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முக்கிய தீர்மானம் வெளியாகியுள்ளது. அதன்படி பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதிஅளித்துள்ளது.

இந்த புதிய கட்டண மாற்றம் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மின்சார உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்திருப்பதை முன்னிட்டு, சுமார் 13.56% கட்டண உயர்வை இலங்கை மின்சார சபை (CEB)  கோரியிருந்தது. அதனை பரிசீலித்த பின்னர், கட்டண மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வு நடைமுறைக்கு வந்ததும், வீட்டு மின்சார பயன்பாடு முதல் தொழில்துறை பயன்பாடு வரை அனைத்து தரப்பினருக்கும் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பயன்பாட்டு அலகுகளின் அடிப்படையில் கட்டணத்தில் சதவீத மாற்றங்கள் அமையும் என்பதால், அதிக மின்சார பயன்பாடு கொண்ட குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக செலவினை சந்திக்க நேரிடலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT