இம்தியாஸ், கபீர் மற்றும் ஹர்ஷனவுக்கு புதிய பதவிகள்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியவற்றில் பல முக்கிய பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இம்தியாஸ், கபீர் மற்றும் ஹர்ஷனவுக்கு புதிய பதவிகள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியவற்றில் பல முக்கிய பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச பல முக்கிய பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT