ஆசிரியர்களுக்கு ரூ.65,000… வைத்தியர்களுக்கு ரூ.94,000! 2027 ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு

அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அரச சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் பொதுச் சேவையை வலுப்படுத்துவது அவசியம் எனவும் அவர் கூறினார்.

ஆசிரியர்களுக்கு ரூ.65,000… வைத்தியர்களுக்கு ரூ.94,000! 2027 ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுத்துறை ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயர்த்தப்படும் என்றும், அதன்படி ஆசிரியர்களின் ஆரம்பக்கால சம்பளம் ரூ. 65,000 ஆகவும், வைத்தியர்களின் ஆரம்பக்கால சம்பளம் ரூ. 94,000ஆகவும் அதிகரிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

நிகவெரட்டிய நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கம் தனது முதல் வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை ஏற்கெனவே உயர்த்தியுள்ளதாகவும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றுமொரு சம்பள உயர்வைச் செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அரச சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் பொதுச் சேவையை வலுப்படுத்துவது அவசியம் எனவும் அவர் கூறினார்.

ஆசிரியர்கள், பொலிஸார் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட 121,000 புதிய பொதுத்துறை ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டங்களையும் ஜனாதிபதி அறிவித்தார்.

அரசியல் ரீதியான நியமனங்களுக்குப் பதிலாக, தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலமாகவே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கிராம உத்தியோகத்தர்கள், பிரிவெனா நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் உள்ளவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் ஜனாதிபதி அநுரகுமார அறிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான மற்றும் திறமையான பொதுச் சேவை இன்றியமையாதது என்பதை அவர் வலியுறுத்தினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT