தொலைபேசி சின்னத்தில் சஜித் களமிறங்குவது கேள்விக்குறி

அப்போது, நான் எமது மக்கள் முன்னணி கட்சியின் ஸ்தாபகராக இருந்தேன். அந்தப் பொறுப்பிலிருந்து நான் விலகிய பின்னர், கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமித்தேன்.

மே 11, 2024 - 11:58
தொலைபேசி சின்னத்தில் சஜித் களமிறங்குவது கேள்விக்குறி

எதிர்வரும் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் சஜித் பிரேமதாஸ போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அதற்கான சட்ட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கணவர் சேனக டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட அந்தஸ்து தொடர்பாக பல சர்ச்சைக்குரிய நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கும் என்றும், கட்சியின் அதிகாரத்தை தானே கைப்பற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஐக்கிய மக்கள் சக்தியை நான் தான் ஸ்தாபித்தேன். 2010ஆம் ஆண்டு ஸ்ரீபதி சூரியாராச்சியும் மங்கல சமரவீரவும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்கள்.

“அப்போது, நான் எமது மக்கள் முன்னணி கட்சியின் ஸ்தாபகராக இருந்தேன். அந்தப் பொறுப்பிலிருந்து நான் விலகிய பின்னர், கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமித்தேன். 

அப்போது கட்சியின் செயலாளராக டயானா கமகே இருந்தார். பின்னர் டயானா கமகே அந்தப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ரன்ஜித் மத்தும “பண்டார அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

“கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்லவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்துக்குமான எழுத்து பூர்வமான சான்றுகள் என்னிடம் உள்ளன. 

“இது தொடர்பாக நாம் வழக்கும் தாக்கல் செய்யவுள்ளோம். தேவையேற்பட்டால் சஜித் பிரேமதாஸவின் கட்சியின் தலைமை பதவியை நாம் கேள்விக்கும் உட்படுத்த முடியும்” என்றார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!