திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படம் எடுக்க தாடியுடன் பொலிஸ் சீருடையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் கண்டியில் கைது

திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை எடுப்பதற்காகப் பொலிஸ் சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் நின்ற தலங்கம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படம் எடுக்க தாடியுடன் பொலிஸ் சீருடையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் கண்டியில் கைது
AI உருவாக்கிய மாதிரிப்படம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை (Pre-shoot) எடுப்பதற்காகப் பொலிஸ் சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் காத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முகம் முழுவதும் தாடி வளர்த்த நிலையில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சீருடையுடன் நபர் ஒருவர் கண்டி, யட்டிநுவர வீதி மற்றும் கொழும்பு வீதி சந்திப்புக்கு அருகில் நிற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கண்டி தலைமையகப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தனது திருமணத்தை முன்னிட்டு இந்து மத சம்பிரதாயத்தின்படி தாடி வளர்த்துள்ளதாகவும், தனது காதலியுடன் திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை எடுப்பதற்காகவே அங்கு காத்திருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்து மத சம்பிரதாயத்தின்படி திருமணத்தில் தாடியுடன் பங்கேற்பதற்குப் பொலிஸ் மா அதிபரிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முகம் முழுவதும் தாடி வளர்ப்பதற்கு அனுமதி இல்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் குறித்த உத்தியோகத்தர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT