நாகொட துப்பாக்கிச் சூடு; உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்தார்!

உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.

நாகொட துப்பாக்கிச் சூடு; உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்தார்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

களுத்துறை, நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்னால் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த உணவக உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

காலை 7.40 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (11) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண், தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மட்டக்களப்பு, வாழைச்சேனையில் வைத்து நேற்று (10) கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT