மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் விமான சேவைகள் மாலை 5 மணி வரை ரத்து!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானசேவைகளை இன்று (மார்ச் 1, 2026) மாலை 5.00 மணி வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கையில் விமான சேவைகள் மாலை 5 மணி வரை ரத்து!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் மற்றும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையிலிருந்து அந்த நாடுகளுக்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த விமானசேவைகளை இன்று (மார்ச் 1, 2026) மாலை 5.00 மணி வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாதுகாப்பு கருதி ஈரான், இஸ்ரேல், ஈராக் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதே இந்தத் தடங்கலுக்கு முக்கிய காரணமாகும். 

விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் உங்கள் விமானத்தின் தற்போதைய நிலையை அறிய சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும், இந்த பாதிப்பால் விசா காலம் முடிவடையும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு 10 நாட்கள் இலவச விசா நீட்டிப்பு வழங்கப்படும் என குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT