ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. 

ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. 

மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரயில் நிலையம் அருகே ரயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்.) வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர் மற்றும் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஓடும் ரயிலில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர்.

ஆனால் தொடர்ந்து அந்த வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆர்.பி.எப். வீரர், 3 பயணிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எப். வீரர் டஹிசர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது அதில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்புப்படையினர், பொலிஸார் தப்பியோடிய வீரரை தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்தனர்.  அந்த வீரரின் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்தும் வீரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT