ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லொறி – வேன் மோதல்; இருவர் படுகாயம்

விபத்தில் லொறியும் வேனும் கடுமையாக சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லொறி – வேன் மோதல்; இருவர் படுகாயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில், வேனின் சாரதி உட்பட மேலும் ஒருவரும் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிப் பயணித்த லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முயன்ற வேளையில், டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த வேன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக இந்த விபத்து தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் லொறியும் வேனும் கடுமையாக சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT