10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, மத்துகமை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் யக்கமுல்ல, எல்பிட்டிய, நாகொட, இமதுவ உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன, பிட்டபெத்தர மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT