மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி வருகிற 17ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில் பிசிசிஐ புதிய முடிவை எடுத்துள்ளது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். 

ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் இத்தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் கூறிவுள்ளது.

அதேசமயம் இத்தொடர் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் தேர்வுசெய்யப்பட்ட லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், நந்த்ரே பர்கர், மயங்க் அகர்வால் மற்றும் செதிகுல்லா அடல் ஆகியோரை அணிகள் அடுத்த சீசனுக்கு தக்க வைக்க முடியும் என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக, ஃபிரேசர் மெக்குர்க் தொடரிலிருந்து விலகியதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT