தபால்மூல வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

குறித்த விண்ணப்பதாரர்கள், நாளை 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தபால்மூல வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை(05) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குறித்த விண்ணப்பதாரர்கள், நாளை 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும், நாளைக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனையின்றி நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்கு தலைவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT