பாடசாலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இதன் முதற்கட்டமாக மாதிரி விண்ணப்பப்படிவமொன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

பாடசாலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாடசாலைகளில் மாணவர்களை இடைநிலை வகுப்புக்களில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கல்வி அமைச்சிற்கு வந்து தமது நேரத்தை வீண்டிக்காத வகையில் திட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக மாதிரி விண்ணப்பப்படிவமொன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கமைய, இந்த படிவங்களை பூர்த்தி செய்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இணைக்க விரும்பும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டிற்குப் பின்னர் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT