அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - வெளியான சுற்றுநிரூபம் 

வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு - வெளியான சுற்றுநிரூபம் 
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை வழங்குவது தொடர்பான விசேட சுற்றுநிரூபம் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் ஒப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு திறைசேரியின் நிதியில் இருந்து வழங்கப்படமாட்டாது.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் வரி அறவீட்டினால் கிடைக்கப்பெற்ற இலாபத்தில் 30 சதவீதத்தை கூட்டு நிதியத்துக்கு செலுத்திய நிறுவன ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என குறித்த சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலாபம் ஈட்டாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT