ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, தற்போது 8 வீதமாக உள்ள வட்டி வீதம் 13 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் தற்போது சீரான முறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  இதனை கருத்தில் கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, சுமார் 27 இலட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் இந்த வட்டி வீத அதிகரிப்பின் மூலம் பல நன்மைகளை பெறுவபர்கள் என, இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டிள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT