அமரவீர உள்ளிட்டவர்களை நீக்குவதற்கான தடை நீட்டிப்பு

கட்சியின் பதவிகளில் இருந்து மூவரை நீக்குவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமரவீர உள்ளிட்டவர்களை நீக்குவதற்கான தடை நீட்டிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

குறித்த தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த மூவரால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT