சீரற்ற காலநிலையால் 26 பாடசாலைகளுக்கு விடுமுறை; வெளியான அறிவிப்பு

பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டுள்ளதாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

சீரற்ற காலநிலையால் 26 பாடசாலைகளுக்கு விடுமுறை; வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், அங்குள்ள 26 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் தொடரும் மழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டுள்ளதாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலை, கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பாடசாலை, மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலை, வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலை என்பன கற்றல் செயற்பாடுகளுக்காக இயங்கவில்லை என்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வடக்கில் தொடர்ந்தும் அதிக மழை பொழிவதால் நாளை மேலும் பல பாடசாலைகள் இயங்க முடியாமல் பாதிப்படையக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT