இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு!

பல மாகாணங்களில், சுமார் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதால், நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல மாகாணங்களில், சுமார் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும்.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT