புதிதாக மின் இணைப்புகளை பெற வரி இலக்கம் கட்டாயம்!

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக மின் இணைப்புகளை பெற வரி இலக்கம் கட்டாயம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

புதிதாக மின் இணைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது, வரி கோப்பு இலக்கம் பெறும் செயற்பாட்டை கட்டாயமாக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல், நடைமுறை கணக்கு தொடங்குதல், நிலம் மற்றும் அசையாச் சொத்து உள்ளிட்ட சொத்துகளைப் பெறுதல் போன்ற செயற்பாடுகளின் போது, வரி கோப்பு எண்ணைப் பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான பரிந்துரை நிதித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழுவிடம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT