தியத்தலாவை பஸ் விபத்தில் ஆறு பேர் காயம்

இந்த விபத்தில்  5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

தியத்தலாவை பஸ் விபத்தில் ஆறு பேர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தியத்தலாவையில் இன்று(16) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி பண்டாரவளை நோக்கி  பயணித்த தனியார் பஸ் என்பன, தியத்தலாவை காஹகல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த விபத்தில்  5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

-ராமு தனராஜா

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT