சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்... வெளியான அறிவிப்பு!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(26) ஆரம்பமாகியுள்ளது. 

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்... வெளியான அறிவிப்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(26) ஆரம்பமாகியுள்ளது. 

இதனையடுத்து, பெல்மதுளை கல்பொத்தவல ஸ்ரீ பாத விகாரையில் இருந்து புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகள் என்பன. இன்று அதிகாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், நல்லத்தண்ணி மற்றும் ஹட்டன் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி வரை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் வழிபாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் தற்காலிக அல்லது நிரந்தர வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அன்னதானம் வழங்குவதற்கு முன்னர் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரம் உரிய முறையில் பேணப்பட வேண்டும்.

அத்துடன, சிவனொளிபாதமலை ஸ்தலம் மற்றும் ஓய்வறை உள்ளிட்ட எந்த பகுதியிலும் யாசகம் பெறுவதற்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவனொளிப்பாதமலைக்கு பயணிப்பவர்கள் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

வருடாந்தம் சிவனொளிபாதமலை பருவக்கால நிறைவின் போது பெருந்தொகையான பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 20 இலட்சம் ரூபாய் வரை செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT