ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஷிராந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீட்டிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

'சிரிலிய சவிய' நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான ஷிராந்தி ராஜபக்ஷவின் மேலதிக வைத்திய அறிக்கைகளை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதுவரை பிணை வழங்குவது தொடர்பான கட்டளையைப் பிறப்பிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.ரி. (CT) ஸ்கேனர் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கென 'சிரிலிய சவிய' அமைப்பின் ஊடாக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்தே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT