ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்புச்சான்றிதழை புதுபிக்கத்தேவையில்லை

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் கூறியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிறப்புச்சான்றிதழை புதுபிக்கத்தேவையில்லை
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே புதிய நகலை சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில், பதிவாளர் நாயகம் திணைக்களம், கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு பதிவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT