பொரளை பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் அதிகளவான மரங்கள்

மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரளை பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் அதிகளவான மரங்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, பொரளை பகுதியில் காணப்படும் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அங்கு ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாநகர சபையின் வரம்புக்குள் 329 ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு நகரில் காணப்பட்ட ஆபத்தான 214 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் நிபுணர்கள் குழுவால், கொழும்பு நகரில் 700 மரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT