லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு!
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து, லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படுகின்றது.
இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டர் 120 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,476 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT