லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 334 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் இன்று (5) காலை தெரிவித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

லிட்ரோ சமையல் எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 334 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் இன்று (5) காலை தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புடன், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 134 ரூபாயினாலும் 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 61 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த விலை திருத்தத்தின் மூலம் 12.5 கிலோகிராம் எடை கொண்ட சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாயாகும்.

அத்துடன் 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1904 ரூபாயாகவும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -