நள்ளிரவு முதல் எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாயினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 340 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாயினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 375 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

அத்தோடு, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 405 ரூபாவியிருந்து 325 ரூபாயாக குறைக்கப்படவுள்ளதோடு, ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 510 ரூபாயிலிருந்து 465 ரூபாய் வரையிலும் குறைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாயினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT