முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த வழக்கில் ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராகப் பெயரிடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் இருவரும் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மூன்று வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (மே 20)சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT