பஸ் கட்டணம் குறித்து இறுதி முடிவு

எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பஸ் கட்டணம் குறித்து இறுதி முடிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிபொருள் விலை குறைவால் பஸ் கட்டணம் குறைக்கப்படுமா? இல்லையா? என இன்று (02) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டதுடன், டீசல் விலை 30 ரூபாயால் குறைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆனால், எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு சந்தர்ப்பங்களிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாததால் எதிர்வரும் ஜூலை மாதம் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென பஸ் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கமவிடம் வினவியதுடன், அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT