தேசபந்து தென்னகோனின் ரிட் மனு மீதான தீர்ப்பு திங்கட்கிழமை

மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தேசபந்து தென்னகோனின்  ரிட் மனு மீதான தீர்ப்பு திங்கட்கிழமை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த வருடம் பேராட்ட செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தபோது ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்  தொடர்பில் தமக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்துச் செய்யுமாறுகோரி தேசபந்து தென்னகோன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை (23) அறிவிக்கப்பட இருந்த நிலையில்   மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT