தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு?

தற்போது உள்நாட்டு சந்தைகளில் ஒரு தேங்காயின் விலை ரூ.120 மற்றும் ரூ.130 என அதிக விலைக்கு விற்கப்படுவதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு?
ADVERTISEMENT
ADVERTISEMENT

பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் உள்ளுர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.

தற்போது உள்நாட்டு சந்தைகளில் ஒரு தேங்காயின் விலை ரூ.120 மற்றும் ரூ.130 என அதிக விலைக்கு விற்கப்படுவதாக தேசிய நுகர்வோர் உரிமைக் காப்பக அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பல்வேறு காரணங்களால் சந்தையில் தேங்காயின் விலை அதிகரிக்கிறது. தேங்காய் விலையுயர்ந்தாலும், செயல்திறன் மிக்க விநியோகத்தால் தேங்காய் எண்ணெய் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறது. 

விநியோகத்தைத் தடை செய்து செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்துவதன் மூலம் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கமாகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT