போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

இளைஞனிடம் இலங்கை கடவுச்சீட்டும் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

போலி கனடா கடவுச்சீட்டை பயன்படுத்தி, கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயது இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (16) கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபர், கட்டாரின் டோஹா நகர் நோக்கிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் வழங்கிய கனடா கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைக்காக பரிந்துரைத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனிடம் இலங்கை கடவுச்சீட்டும் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், கனடாவில் உள்ள உறவினர் ஒருவர் தனக்கு உதவியதாகவும், கனடாவில் உள்ள நபர் இலங்கையில் உள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாயை கொடுத்து, இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT