பாடசாலை மின் விசிறியில் மோதி உயிரிழந்த மாணவன் 

​​நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மின் விசிறியில் மோதி உயிரிழந்த மாணவன் 
ADVERTISEMENT
ADVERTISEMENT

புஸல்லாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் வகுப்பறையில் வேறு சில மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​நாற்காலியின் உதவியுடன் மேசையின் மீது ஏறிய போது, கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புபுரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT